செய்திகள் இந்தியா
ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு பார்சி முறையில் நடைபெற்றது
மும்பை:
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார்.
ரத்தன் டாடா பார்சி இனத்தை சார்ந்தவர். பார்சிகள் தங்களது வழக்கப்படி இறந்த பின் உடலை புதைக்கவோ எரிக்கவோ மாட்டார்கள். மனித உடலை இயற்கையின் பரிசாகக் கருதும் அவர்கள் உடலை இயற்கைக்கே திருப்பித் தர வேண்டும் என்னும் நம்பிக்கை உடையவர்கள். உடலை எரிப்பதோ புதைப்பதோ நிலம் நீர் காற்று ஆகியவற்றை மாசு படுத்தும் என கருதுபவர்கள்.
நஸ்ஸேலர்கள் என்பவர்கள்தான் பார்சி மதத்தில் இறந்தவர்களின் உடலை கையாளுவார்கள். இதன்படி உடலை சுத்தம் செய்த அவர்கள், உடலை 'சுத்ரே' என்னும் பருத்தி உடுப்பை போர்த்தி, 'குஸ்தி' என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளை கயிறு மூலம் காட்டுவார்கள்.
அதன் பின் பார்சி பாதிரியார்களால் பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதம் செய்யப்படும். இந்த சடங்குகள் இறந்தவரின் ஆன்மாவை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு சுமூகமாக மாற்ற உதவுவதாக நம்புகின்றனர். இதில் ரத்தன் டாடாவின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பாரம்பரியமாக, அமைதி கோபுரம் எனப்படும் THE TOWER OF SILENCE க்கு உடல் கொண்டு செல்லப்படும், அவர்கள் முறைப்படி இறந்தவரின் உடல் 'அங்குள்ள குவி மாடத்தில் வைக்கப்பட்டு உடல் உறுப்புகள் பறவைகள், கழுகுகளுக்கு இரையாக கொடுக்கப்படும்.
எஞ்சியுள்ள எலும்புகள் இறுதியில் கோபுரத்தின் மையக் கிணற்றில் விழும், அங்கு அவை மேலும் சிதைந்துவிடும். இதனால் இயற்கை பாதிக்காது.
தற்போதைய சுற்றுச்சூழல் மற்றும் நடைமுறை சவால்கள் மற்றும் அருகி வரும் கழுகுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 2008 க்கு பிறகு இந்த பழக்கம் பார்சிகளிடையே வெகுவாக குறைந்து விட்டது.
எனவே ரத்தன் டாடா உடலுக்கு வழக்கமான பார்சி சடங்குகள் செய்யப்பட்டாலும் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 10:12 am
Uber நிறுவனம் இந்தியாவில் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
December 2, 2024, 1:07 pm
கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு
December 2, 2024, 12:59 pm
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை
December 2, 2024, 10:11 am
ஆந்திராவில் வக்பு வாரியம் கலைக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு
November 29, 2024, 10:23 pm
ஷாஹி ஈத்கா ஜாமா பள்ளிவாசல் ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
November 27, 2024, 3:59 pm
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
November 25, 2024, 8:43 pm
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
November 25, 2024, 4:23 pm
உ.பி.பள்ளிவாசல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் பலி
November 24, 2024, 1:23 pm