நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்துக்கு முதல் தீர்மானம்

புது டெல்லி: 

ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைந்ததும்  முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வராகப் பதவியேற்க உள்ள ஒமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற ஜம்மு}காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
அங்கு காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரில்  முதல் அமைச்சரவைக் கூட்டத்தில்,மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரிடம் தீர்மானம்  கொண்டு சேர்க்கப்படும்.

ஒன்றிய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. அப்போதுதான் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி திட்டங்களைக் கேட்டு பெற முடியும்.

மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பறித்த பாஜகவிடமே, அதை திரும்பப் கேட்பது முட்டாள்தனம் என்றார். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset