நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

EVMகளில் குளறுபடி: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புது டெல்லி:

ஹரியானா பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது  சில EVM வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி கண்டறியப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.

ஹரியாணா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பின்னர் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட EVMகளில் சராசரியாக 60 முதல் 70 சதவீதம் வரையிலான சார்ஜ்  இருக்கும். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்ட சில EVM களில் 99 சதவீத சார்ஜ் இருந்ததாக கூறப்படுகிறது.

இது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset