நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டெல்லி முதல்வரின் இல்லத்துக்கு சீல்

புது டெல்லி:

டெல்லி முதல்வர் அதிஷியின் இல்லத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் காலி செய்து சீல் வைத்தனர்.

முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் தங்கியிருந்த அரசு இல்லத்தில் தற்போதைய முதல்வர் அதிஷி முன்னறிவிப்பின்றி குடியேறியதால் அவரது உடைமைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.

மாநில முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப் பணித்துறையே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதற்கு டெல்லி யூனியின் பிரதேச துணை நிலை ஆளுநரின் தலையீடுதான் காரணம் என்று தில்லி அரசும் ஆம் ஆத்மி கட்சியும் குற்றம்சாட்டியுள்ளது.

முதல்வர் அதிஷி  வீட்டில் இல்லாத வேளையில் அங்கு நுழைந்த பொதுப்பணித்துறையினர், முதல்வரின் உடைமைகளை வெளியேற்றினர்.

அவற்றை சிறிய வாகனங்களிலும் மூன்று சக்கர மிதிவண்டியிலும் ஏற்றி வெளியே கொண்டு சென்று வீட்டை சீல் வைத்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset