நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலீடுகளை ஈர்க்க ஆசியான் நாடுகள் யாரையும் சார்ந்திருக்காத நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும்

கோலாலம்பூர்: 

வெளிநாட்டு முதலீட்டார்களை ஈர்க்க ஆசியான் நாடுகள் யாரையும் சார்ந்திருக்காத நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும் என அனைத்துலக வாணிப, தொழிற்துறை, முதலீட்டு அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸ் கூறினார் 

ஆசியானின் உறுதியான மற்றும் நிலையான கொள்கை காரணத்தால் வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைகளை ஈர்க்க முடியும் என்பதுடன் அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அவர் சொன்னார். 

அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் மேற்கத்திய வர்த்தக தேசங்கள், மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளான சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பினை நல்கி வருகிறோம். 

இருப்பினும் அனைத்துலக பொருளாதார நிலையானது தற்காலத்தில் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது என்று அவர் சொன்னார். 

லாவோஸ் நாட்டில் இருக்கும் அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸ் 44ஆவது, 45ஆவது ஆசியன் சம்மிட் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset