நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் புதிய தேசிய நிர்வாகத்தினர் அறிவிப்பு: டான்ஸ்ரீ ராமசாமி உதவித் தலைவர், டத்தோ சிவக்குமார் பொருளாளராக நியமனம்

கோலாலம்பூர்:

பல புதிய முகங்களைக் கொண்ட மஇகாவின் புதிய தேசிய நிர்வாகத்தினர் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-2027ஆம் ஆண்டுகளுக்கான மஇகா கட்சி தேர்தல் கடந்த மாதங்களில் நடைபெற்று முடிந்தது.

இதில் கட்சியின் நியமனப் பொறுப்புகளுக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

இந்நிலையில் அப் புதிய நிர்வாகம் குறித்து கட்சி தலைமைத்துவத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்சியின் நியமன உதவித் தலைவராக டத்தோஸ்ரீ வேள்பாரி உள்ளார். தற்போது மற்றொரு உதவித் தலைவராக டான்ஸ்ரீ ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

டத்தோ ஆனந்தன் கட்சியின் தலைமைச் செயலாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் டத்தோ சிவக்குமார் கட்சியின் புதிய பொருளாளராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

டத்தோ ஏகே ராமலிங்கம் தகவல் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வேளையில் சிவசுப்பிரமணியம் தேசிய ஊடகப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மஇகா கட்டட குழுத் தலைவராக டத்தோ ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் தேசிய அமைப்பு செயலாளராக டத்தோ முனியான்டி, தேசிய வியூக அதிகாரியாக டத்தோ தினாளன், நிர்வாகச் செயலாளராக டத்தோ ஏடி குமாரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் இப் புதிய நிர்வாகம் மஇகாவை அடுத்த நிலைக்கு நகர்த்தி செல்லும் பரவலாக நம்பப்படுகிறது.

மேலும் டத்தோ அசோகன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ஆகியோர் கட்சியின் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset