நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பன்னாட்டு நிறுவனங்களின் ஆன்லைன் வர்த்தகத்தை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்கத் தலைவர் கோரிக்கை

திருவாரூர்:

பண்டிகை காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக மக்கள் மத்தியில் மாயையை ஏற்படுத்தி விளம்பரங்களை மேற்கொண்டு வணிகத்தை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பண்டிகை காலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள், ஆன்லைன் மூலமாக பெரிய அளவில் வியாபாரம் செய்கிறார்கள். மக்கள் மத்தியில் அளவுக்கதிகமான  விளம்பரங்களை மேற்கொண்டு, உள்நாட்டு வணிகர்களின் வர்த்தகத்தை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒன்றிய அரசு, தடை விதிக்க வேண்டும்.

பண்டிகை காலங்களில் சில அதிகாரிகள் சில கடைகளை குறிவைத்து தவறான செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள். அதிகாரிகள் தவறு பற்றி ஆதாரம் தந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே அதிகாரிகள் தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset