நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சென்னை விமானச் சாகச நிகழ்ச்சியில் 240 பேர் மயக்கம்; சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு

சென்னை: 

இந்திய விமானப் படையின் 92-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 

அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் கார்த்திகேயன், ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார், கொருக்குப்பேட்டை ஜான் பாபு, பெருங்களத்தூர் சீனிவாசன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset