நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நமது பாரம்பரிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும்  ஒரு வீர விளையாட்டு கபடி: செனட்டர் சரஸ்வதி

கோலாலம்பூர்:

நமது பாரம்பரிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வீர விளையாட்டாக கபடி விளங்குகிறது.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி இதனை கூறினார்.

21 வயதிற்குக் கீழான மாநிலங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களை சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கபடி, நமது பாரம்பரிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வீர விளையாட்டு என்பதற்கும் மேலாக, நமது சமூகத்தின் ஒற்றுமை, தைரியம், பொறுப்புணர்வு, மன உறுதியை வெளிப்படுத்தும் வல்லமை கொண்ட கலையாக திகழ்கிறது. 

இது எமது அடையாளமாகும்; முன்னோர்கள் மீதான மரியாதையையும் நம் சமூகம் கொடுக்கும் ஒற்றுமையும் பிரதிபலிக்கிறது. 

கபடி தற்பொழுது உலகில் உடல், மன உறுதியை வளர்க்கும் ஒரு உலகளாவிய விளையாட்டாகவும் மாறியுள்ளது. 

இளம் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், ஒற்றுமையைப் பிரதிபலிக்கவும் இம்மாதிரியான போட்டிகள் மிக முக்கியம். இன்றைய போட்டி, ஒவ்வொரு வீரரும் தங்கள் மாநிலத்தின் பெருமையை காத்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஒற்றுமையான ஆற்றலுடன் மேம்படும் ஒரு அற்புத தருணம் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

மலேசியாவிலும் கபடியின் வளர்ச்சி மிக முக்கியமானது. நமது இளம் வீரர்கள் பல்வேறு மாநிலங்களில் தங்கள் திறமைகளை மேம்படுத்தி, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் முயற்சியில் உள்ளனர். 

இவ்விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றல் தரும் பல அமைப்புகள் உள்ளன. குறிப்பாக, மலேசிய கபடி சங்கம் போன்ற அமைப்புகள் இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு அடித்தளம் அமைத்து வருகின்றன.

இவ்வமைப்புகளின் பெரும் பங்கினால் மலேசியாவில் கபடி விளையாட்டு தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது என்பதில் பெருமை கொள்ளலாம் என்று சரஸ்வதி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset