செய்திகள் இந்தியா
மது விலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்ய சபதம்: புதிய கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷேர்
பிகார்:
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
பிகாரில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மணி நேரத்தில் பூரன மதுவிலக்கை ரத்து செய்வேன் என்றும் அவர் சபதமாக கூறியுள்ளார்.
பாஜக, திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல்கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றிபெறச் செய்தவர் பிரசாந்த் கிஷோர்.
கடந்த 2021-ம் ஆண்டில் இவர் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை தேர்தல் வியூகங்களை வகுத்துகொடுத்து வெற்றி பெற வைத்த பிறகு இனி தேர்தல்வியூகங்களில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்தார்.
2022, அக்டோபர் 2-ம் தேதி முதல் பிகாரில் பாதயாத்திரையை அவர் தொடங்கி நடத்தி வருகிறார். சுமார் 3,000கி.மீ தூரம் பாதயாத்திரை சென்றார்.
இந்நிலையில், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை அவர் தொடங்கினார். பிகாரில் உள்ள முஸ்லிம்களும், பட்டியலின மக்களும் ஜாதி, மத அடிப்படையில் வாக்களிப்பதை நிறுத்திவிட்டு, தங்களின் குழந்தைகள் எதிர்காலம் கருதி வாக்களிக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், பிகார் அரசுக்கு நிதி ஆதாரம் இல்லாததால்தான் பள்ளிகளின் கட்டமைப்பு சரிவர இல்லை என்று கூறிய அவர் அரசின் நிதி ஆதாரத்தைப் பெருக்க ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு கொள்கையை ரத்து செய்வேன் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 10:12 am
Uber நிறுவனம் இந்தியாவில் படகுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
December 2, 2024, 1:07 pm
கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு
December 2, 2024, 12:59 pm
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை
December 2, 2024, 10:11 am
ஆந்திராவில் வக்பு வாரியம் கலைக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு
November 29, 2024, 10:23 pm
ஷாஹி ஈத்கா ஜாமா பள்ளிவாசல் ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
November 27, 2024, 3:59 pm
கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்திலிருந்து விழுந்து மூவர் மரணம்: Google Maps மீது விசாரணை
November 25, 2024, 8:43 pm
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
November 25, 2024, 4:23 pm
உ.பி.பள்ளிவாசல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் பலி
November 24, 2024, 1:23 pm
இந்தியாவில் செய்திக்கான செயலியில் டிவிட்டர் முதலிடம்: எலான் மஸ்க்
November 23, 2024, 12:15 pm