செய்திகள் உலகம்
ஈரானில் பள்ளி தாக்குதல் குறித்து விசாரணை கோரிக்கை: PBB
ஜெனீவா:
ஈரானில் உள்ள பெண்கள் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று 'Pertubuhan Bangsa-Bangsa Bersatu' (PBB) மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
உயர் ஆணையர் வோல்கர் டர்க் உடனடி, பாகுபாடற்ற, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக PBB மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி கூறினார்.
இந்தத் தாக்குதலை போர் குற்றமாக வகைப்படுத்த போதிய தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் டர்க் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஷம்தசானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அனைத்து தரப்பினரும் தங்களைக் கட்டுப்படுத்தி, பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு ஈரான் பகுதியில் உள்ள ஒரு சிறுமியர் துவக்கப் பள்ளி, பிப்ரவரி 28 அன்று தாக்குதலுக்குள்ளானது.
அமெரிக்க படைகள் திட்டமிட்டு பள்ளிகளை இலக்காக்க மாட்டார்கள் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.
இதற்கிடையில், இஸ்ரேல் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தது.
PBB-விற்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி, மார்ச் 1 தேதியிட்ட கடிதம் மூலம் இந்த விவகாரத்தை டர்க் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இந்தத் தாக்குதல் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் “ஒரு கொலைக் குற்றம்” என்று பஹ்ரெய்னி குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலில் 160 மாணவிகள் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 3:40 pm
தென் கொரியாவில் கொடூரம்: 8 மாதக் குழந்தையை ரிமோட்டால் அடித்துக் கொன்ற தாய்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
