
செய்திகள் உலகம்
இஸ்ரேலின் மிகப் பெரிய விமானத் தளத்தை அழித்த ஈரான்
ஜெருசலம்:
இஸ்ரேலின் மிகப் பெரிய நெவடிம் விமானத் தளத்தை ஏவுகணைத் தாக்குதலில் அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் அழிக்கப்பட்டதாக ஈரான் பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஸா, லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த ஜூலை மாதம், ஈரானுக்கு சென்றிருந்த ஹமாஸின் முக்கிய தலைவரான மாயில் ஹனீயேவை அந்நாட்டில் வைத்தே இஸ்ரேல் படை கொன்றது.
இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், 400-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை ஈரான் தாக்கியது.
மேலும், இந்த தாக்குதல் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கை என்று ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am