நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: டான்ஶ்ரீ  ராமசாமி

ஈப்போ:

பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் டத்தோஶ்ரீ ஹாஜி சாரணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பேரா மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ எம். இராமசாமி  இதனை தெரிவித்தார்.

மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஹாஜி சாரணியை மரியாதை நிமிர்த்தத்தின் அடிப்படையில் சந்தித்தேன்.

இச்சந்திப்பில்  மாநில மஇகாவின் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து மாநில மந்திரி புசாரிடம் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் பேரா மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள், பிரச்சினைகள் குறித்தும் மந்திரி புசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

கட்சியை வலுப்படுத்தி, சமுதாயத்துடன் அணுக்கமான உறவினை மேம்படுத்தும் பேரா மாநில மஇகாவின் நடவடிக்கைகளை  டத்தோஸ்ரீ சாரணி பெரிதும் வரவேற்றார். 

தேசிய முன்னணி தோழமை உணர்வுடன் மாநில மஇகாவின் செயல் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் அவர் உறுதியளித்தார் என்று டான்ஶ்ரீ ராமசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset