நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லஹாட் டத்துவில் தாக்குதல் நடத்திய 7 பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டது

புத்ராஜெயா:

லஹாட் டத்துவில் தாக்குதல் நடத்திய 7 பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் நிலை நிறுத்தியது.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு லஹாட் டத்துவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறிப்பாக மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராக இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் ஈடுப்பட்ட 7 பிலிப்பைன்ஸ் நாட்டினர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி கூட்டரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு அவர்களின் மனுவை இன்று ஏகமனதாக நிராகரித்தது.

இதன் மூலம் அவர்களுக்கு எதிரான மரணத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset