நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரும்பிய உணவை சாப்பிட முடியவில்லை என்றால் கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் அர்த்தமில்லை: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

விரும்பிய உணவை சாப்பிட முடியவில்லை என்றால் கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் எந்த அர்த்தமும் இல்லை.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

சென்னை அம்போலோ மருத்துவமனையின் சுகாதார பாதுகாப்பு பிரிவின் தலைமை இயக்குநர் டாக்டர் சத்தியா ஸ்ரீராம் சிறப்பு வருகையாக மலேசியா வந்துள்ளார்.

சுகாதார பரிசோதனையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் அவர் பேசி வருகிறார்.

அவ்வகையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் விளக்கங்களை தந்தார்.

டாக்டர் சத்தியா கூறுவது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அதை விட முக்கியம் அவ்வப்போது பரிசோதனைகள் செய்துக் கொள்வது.

நாம் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் பிடித்த உணவை சாப்பிட வேண்டும்.

அப்படி சாப்பிட முடியவில்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

ஆகவே, நாம் அவ்வப்போது சுகாதார பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

நம் சமுதாய மக்கள் இப்போது அடிக்கடி சென்னைக்கு சென்று வருகின்றனர்.

அப்படி செல்பவர்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இந்திய மக்கள் சுகாதார பரிசோதனை விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

சுகாதார பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் மலேசியர்களுக்கு வழிகாட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தயாராக உள்ளது என்று டாக்டர் சத்தியா ஸ்ரீராம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset