நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமானத்தின் உணவில் கரப்பான் பூச்சி

புது டெல்லி:

தில்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்தார்.

விமானத்தில் வழங்கப்பட்ட உணவின் புகைப்படங்கள், விடியோவை அவர் வெளியிட்டார். இது வைரலானது.

அந்தப் பதிவில், தில்லியில் இருந்து நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி வழங்கப்பட்ட ஆம்லெட் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது. இதை அறியாமல், உணவை உட்கொண்ட எனது 2 வயது குழந்தை, உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் கவலை தெரிவித்துக்கொள்கிறது.

இது தொடர்பாக கேட்டரிங் சேவை அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset