
செய்திகள் இந்தியா
மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு
பெங்களூரு:
மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து, தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றுள்ளனர்.
தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரி இருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ''இந்த புகார் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூருவில் உள்ள திலக் நகர் போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' எனக்கூறி, இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:39 am
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
June 20, 2025, 6:03 pm
"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு ராகுல் காந்தி பதில்
June 20, 2025, 5:57 pm
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
June 20, 2025, 4:20 pm
கூட்டங்களை கையாள புதிய சட்டம்
June 19, 2025, 7:26 pm
ரூ.3,000-க்கு 200 முறை டோல் கேட்டை கடக்க புதிய பாஸ்டேக்
June 19, 2025, 2:56 pm
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி: ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது
June 19, 2025, 12:11 pm
ஈரானிலிருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்தனர்
June 18, 2025, 9:43 pm