நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் தேர்தலை அமெரிக்கா, மெக்ஸிகோ, கயானா, தென்கொரியா, பனாமா, சிங்கப்பூர், நைஜீரியா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டது.

சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை பார்வையிட  அனுமதிப்பது இது முதல்முறையாகும்.

ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை  நடைபெற்ற தேர்தலில்  56 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேசிய மாநாட்டுக்  கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

இந்த தேர்தலை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவர் ஜோர்கன் கே.ஆண்ட்ரூஸ் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மக்கள் வாக்களிப்பது மகிழ்ச்சி.

மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுவது, தேர்தல் முடிவைக் காண மக்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset