நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 

சென்னையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வசித்த பகுதி சாலைக்கு அவரது பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். பாடகர் எஸ்.பி.பி.யின் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பகுதியை எஸ்.பி.பி. நகர் என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் நினைவை போற்றும் வகையில் அவரது நினைவு நாளான நேற்று அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதன்படி சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எஸ்.பி.பி.யின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவனாக மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காம்தார் நகர் சாலைக்கு எஸ்.பி.பி.யின் பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்புக்கு அவரது மகன் எஸ்.பி.சரண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை 36 மணி நேரத்திற்குள் நிறைவேறியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset