நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலில் இந்திய சமுதாயம் கற்றுக் கொடுத்த பாடம் அவசியமானது; சைட் ஹுசைனின் வெற்றியை இந்தியர்கள் உறுதி செய்ய வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

குளுவாங்:

மலேசிய அரசியலில் இந்திய சமுதாயம் கற்றுக் கொடுத்த பாடத்தால் பலர் இன்று வருத்தப்படுகின்றனர்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் சைட் ஹுசைன் போட்டியிடுகிறார்.

இளைஞரான அவரின் வெற்றியை இங்குள்ள இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

காரணம் என்ன தான் தேசிய முன்னணியை குறை கூறினாலும் இந்தியர்களின் உரிமையையும் மரியாதையையும் பாதுகாப்பது தேசிய முன்னணி தான்.

இதை யாராலும் மறுக்க முடியாது. இது குறித்து இந்திய சமுதாயத்திற்கு அதிகம் தெரியும்.

மலேசிய அரசியலில் இந்திய சமுகம் அனைவருக்கும் பாடம் கற்றுக் கொடுக்கவில்லை.

தேசிய முன்னணிக்கு மட்டும் தான் பாடம் கற்றுத் தந்தார்கள். இந்த பாடத்தால் பலர் இன்று வருத்தமடைகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இந்த பாடம் அவசியமான ஒன்றாகும்.

அவ்வகையில் மக்கோத்தா தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசைன் தோல்வி கண்டால் கூட மாநில ஆட்சி மாறாது.

ஆனால் அது இந்திய சமுதாயத்திற்கு பெரு இழப்புகளை தரலாம்.

இங்குள்ள வாக்காளர்களின் முடிவு இந்த தொகுதியை மட்டும் பாதிக்காது. ஒட்டுமொத்த ஜொகூரையும் பிரதிபலிக்கும்.

ஆகவே இந்திய வாக்காளர்கள் இத்தேர்தலுல் சிந்தித்து வாக்குகளை செலுத்த வேண்டும்.

இதுவே எனது கோரிக்கை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset