நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டை துணைப் பிரதமர் தொடக்கி வைப்பார்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டை துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தொடக்கி வைப்பார்.

அக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை தெரிவித்தார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு வரும் செப்டம்பர் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

16ஆவது ஆண்டாக இம்மாநாடு ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இதில் செப்டம்பர் 28ஆம் தேதி பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரை இளைஞர், மகளிர், புத்ரி பிரிவுகளுக்கான மாநாடு நடைபெறவுள்ளது.

மறுநாள் காலை 9 மணி முதல் தேசிய பேராளர் மாநாட்டு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டை துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தொடக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.

 அதே வேளையில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, அரசியல் பாதை, அடுத்த தேர்தலுக்கு தயாராவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் அரசியல் பயணத்தில் இதுவொரு முக்கிய அங்கமாக இம்மாநாடு அமையவுள்ளது.

ஆகவே பேராளர்கள் அனைவரும் திரளாக வந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset