நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுப் பணிப் பெண் நிறுவனத்தின் வாயிலாக மோசடி செய்யும் நபருக்கு எதிராக புக்கிட் அமானில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

வீட்டுப் பணிப் பெண் நிறுவனத்தின் வாயிலாக மோசடி செய்யும் நபருக்கு எதிராக புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்த்தில் மகஜர் வழங்கப்பட்டது.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.

இம்மோசடி நடவடிக்கையில் தொடர்புடைய சந்தேக நபர் டிக் டாக் வாயிலாக வீட்டுப் பணிப் பெண் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்பவர்கள் வீட்டிற்கு ஆடம்பர கார்களில் செல்லும் அவர் பல ஆசை வார்த்தைகளை கூறுகிறார்.

இதை நம்பி பணிப் பெண்ணுக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் சராசரி 10,000 ரிங்கிட்டை கட்டணமாக வசூலிக்கிறார்.

அதன் பின் வீட்டிற்கு பணிப் பெண் அனுப்பப்பட்டாலும் அவர் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓடி விடுகிறார்.

அதற்கு பின் மாற்று பணிப் பெண்ணும் கிடைப்பது இல்லை. பணமும் திருப்பி கிடைப்பது இல்லை என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

இம்மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட ஆடவர் மீது 13க்கும் மேற்ப்பட்ட புகார்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாடவர் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் தான் புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில் மகஜர் வழங்கப்பட்டது.

இம்மகஜரை தொடர்ந்து தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் சம்பந்தப்பட்ட ஆடவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என டத்தோ கலைவாணர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset