நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையானது: நஜீப்

கோலாலம்பூர்:

எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையான தகவலாகும்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் இதனை கூறினார்.

எஸ்ஆர்சியின் முன்னாள் ஆலோசகர் என்ற முறையில் அதன்  வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் எனக்கு விந்தையானதாக உள்ளது.

நிதியமைச்சருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய நிதியில் (குவாப்) இருந்து 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை மோசடி செய்ததில் தனக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

எஸ்ஆர்சியின் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று காலை சாட்சியம் அளித்த அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் பிரதமருக்கு எதிரான சிவில் நடவடிக்கையில், அந்த நேரத்தில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிக் பைசல் அரிஃப் கமில் மூலம் இயக்குநர்கள் குழுவை நஜிப் கட்டுப்படுத்தினார் என்று எஸ்ஆர்சி குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தகது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset