நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜே-கோம் தலைவர் பதவியிலிருந்து கைருடின் விலக்கப்பட்ட விவகாரம்: ஃபாஹ்மி ஃபட்சில் விளக்கம் 

கோலாலம்பூர்: 

ஜே கோம் எனப்படும் சமூக தகவல் தொடர்பு துறை தலைவர் பதவியிலிருந்து கைருடின் ஒத்மான் விலக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்க பேச்சாளர் ஃபாஹ்மி ஃபட்சில் விளக்கம் அளித்தார். 

பணி நியமனம் செய்வதும் பிறகு அப்பதவியிலிருந்து விலக்கப்படுவதும் சாதாரண விவகாரம் என்று தகவல் தொடர்பு அமைச்சருமான அவர் சொன்னார். 

இருப்பினும், கைருடின் ஒத்மான் விலக்கப்பட்டதற்கான காரணத்தை ஃபஹ்மி செய்தியாளர்களிடம் கூற மறுத்துவிட்டார். இந்த பொறுப்புக்கு இடைக்கால தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டார் 

ஆனால் அது யார் என்று ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிடவில்லை. முன்னதாக, ஜே-கோம் துறையின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலக்கப்பட்டுள்ளதாக கைருடின் கூறியிருந்தார். அவர் அப்பொறுப்பிற்கு ஆறு மாதங்கள் மட்டுமே தலைவராக இருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset