நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையப் பகடிவதையால் மரணமடைந்த ஈஷா வழக்கில் டுலால் பிரதர்ஸ் எனும் சதீஸ்குமாருக்கு 12 மாதம் சிறை

கோலாலம்பூர்:

இணையப் பகடிவதையால் மரணமடைந்த ஈஷா வழக்கில் டுலால் பிரதர்ஸ் எனும் சதீஸ்குமாருக்கு 12 மாதம் சிறைத் தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4 மாதங்களுக்கு முன் இணையப் பகடிவதைக்கு இலக்கான டிக்டாக்கில் செல்வாக்கு கொண்ட ராஜேஸ்வரி என்ற ஈஷா தற்கொலை செய்துக் கொண்டார்.

ஈஷாவுக்கு எதிராக ஆபாசமான தகவல்களை வெளியிட்டு அவமானப்படுத்திய குற்றச்சாட்டில்  40 வயதுடைய சதீஸ்குமார் கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி சித்தி அமினா கஷாலி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட அவர் தனது குற்றச்சாட்டை மாற்றியதை நீதிபதி அவருக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தார்.

கைதான நாளில் இருந்து இத்தண்டனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

முன்னதாக, மூன்று குழந்தைகளின் தந்தையுமான அவர்  மன்னிப்பு கேட்டு, தனது தவறை ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்த செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset