நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானின் போதனைகள் இஸ்லாத்திற்கு எதிரானது: பினாங்கு முஃப்தி

ஜார்ஜ்டவுன்:

குளோபல் இக்வான் ஹோல்டிங்கிஸின் போதனைகள் இஸ்லாத்திற்கு எதிரானவை.

பினாங்கு மாநில முஃப்தி டத்தோ  டாக்டர் முஹம்மத் சூக்கி ஒத்மான் இதனை கூறினார்.

தீவிர போதனைகள் உண்மையான இஸ்லாமிய போதனைகளில் இருந்து விலகி அதிகப்படியானதாக இருக்கும்.

அவ்வகையில் குளோபல் இக்வான் போதனைகள், இஸ்லாமிய போதனைகள் அல்ல.

தீவிர போதனைகள் தனிநபர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதனை முறையாக கையாளாவிட்டால் நாட்டிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்வ்

முஸ்லிம்களின் அல்-குர்ஆன், சுன்னாவில் இஸ்லாம் குறித்து முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

இதில் தடை செய்யப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட குழு இஸ்லாத்தில் இருந்து ஒரு சிறு பகுதியைப் பிரதானமாகவும் தீவிரமாகவும் எடுத்துச் செல்கிறது.

ஆனால் உண்மையில் இது இஸ்லாத்தின் பண்பு அல்ல என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset