
செய்திகள் கலைகள்
இ-ஹெய்லிங் ஓட்டுநர் கொலை: முன்னாள் மனைவி, மாற்றாந்தாய் சகோதரன் மீது குற்றச்சாட்டு
தாவாவ்:
இ-ஹெய்லிங் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் முன்னாள் மனைவி, மாற்றாந்தாய் சகோதரன் மீது இன்று தாவாவ் உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது.
நீதிபதி Datuk Duncan Sikodol முன் ஒரு மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 35 வயதான Nurima Juli, 30 வயதான Sadam Kiram ஆகிய இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்தாண்டு ஜனவரி 13-ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 11.30 மணி-க்குள் Jalan Anjur Juara அருகே உள்ள செம்பனை தோட்டத்தில் 61 வயதான Nurman Bakaratu என்பவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302, இச்சட்டத்தின் 34 வது பிரிவின் கீழ் அவர்கள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிருப்பிக்கப்பட்டால் தூக்கு தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12 கசையடிகள் வழங்கப்படும்.
இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 18ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am
கண்டேன் ராஜாவை; கேட்டேன் சிம்பொனியை: ரவி பழனிவேல்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm