நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஈப்போ கராத்தே விளையாட்டு போட்டியில் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்

ஈப்போ: 

ஈப்போ கராத்தே கிளப், ஈப்போ லெஜன் ஏற்பாட்டில் இரண்டாவது ஆண்டாக இளையோர்களுக்கான கராத்தே போட்டி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. 

இப்போட்டியில் இம்முறை 500 மாணவர்கள் கலந்துகொண்டு மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர் என்று இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஈப்போ கராத்தே கிளப் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அதிகமான மாணவர்களுக்கு தீவிர பயிற்சிகளை இந்த கராத்தே கிளப்பின் தலைவர் டாக்டர் யுகேந்திரன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது இங்குள்ள கராத்தே மாணவர்கள் அனைத்துலக ரீதியில் போட்டியிடவுள்ளதை காணும் பொழுது மகிழ்ச்சிரமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இம்மாதிரியான விளையாட்டு போட்டிகளில் இளையோர்கள் தீவிரமாக ஈடுபடுவதால் தீயவழிகளுக்கு அவர்கள் செல்லாமல் இருக்க பேருதவியாக அமைகிறது. அத்துடன், இந்நாட்டிற்கு ஒரு சிறந்த விளையாட்டாளரை உருவாக்குவதோடு, கல்வியிலும் அவர்கள் சிறந்த விளங்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இம்மாதிரியான போட்டிகளை ஏற்று நடத்தும் கிளப் மற்றும் இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்க தயாராகவுள்ளோம். மாணவர்கள் நல்வழிபடுத்தும் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு ஆதரவு வழங்குவது மிகவும் சிறப்பாகும் என்று அவர் தம் கருத்தை அவர் பதிவு செய்தார்.

இம்முறை கலந்துக்கொண்ட போட்டியாளர்களின் இயக்கங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

முதல் கட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினார்கள் துள்சி மனோகரனும், மக்கள் சமூகநல , விளையாட்டு மேம்பாட்டுத்துறை இயக்க தலைவர் பா.யுவராஜனும். 

இரு நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, இந்தோனிஷியா கராத்தே போட்டியாளர்களும் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset