நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிலாங்கூர் ஜூனியர் லீக் கால்பந்துப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அதிரடி படைத்தனர்: கென்னத் கண்ணா

ஷாஆலம்:

சிலாங்கூர் ஜூனியர் லீக் கால்பந்துப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்களை கொண்ட அணி அதிரடி படைத்தனர்.

சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஜூனியர் கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 40 அணிகள் இந்த கால்பந்துப் போட்டியில் கலந்துகொண்டன.

இதில் ஒரே இந்தியர் அணியாக பெட்டாலிங்ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் அணி களமிறங்கியது.

பெட்டாலிங்ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

100 அணிகள் கலந்து கொண்ட இப் போட்டியில் சிறந்து விளங்கிய 20 வீரர்கள் இந்த போட்டியில் களமிறங்கினர் என்று சங்கத்தின் துணைத் தலைவர் கென்னத் கண்ணா கூறினார்.

இப் போட்டியின் தொடக்க சுற்றில் நமது போட்டியாளர்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தி சுற்று 16க்கு முன்னேறினர்.

ஆனால் சுற்று 16ல் கடுமையாக போராடி தோல்வி கண்டனர். தோல்வி கண்டாலும் அவர்களின் போராட்டம் பாராட்டுக்குரியது.

இப் போட்டியாளர்கள் அடுத்தடுத்து பல போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக மாணவர்களுக்கான கால்பந்து மேம்பாட்டுத் திட்டங்களை பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் தொடரும்.

அதே வேளையில் இவ்வணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டச் டுரோனிக் டத்தோஸ்ரீ ரவின், ஓயே பிரியாணி பாபு, பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை, துணைத் தலைவர் குணா ஆகியோருக்கு நன்றி  என்று கென்னத் கண்ணா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset