நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீனப் பொது பூப்பந்து போட்டி: அரையிறுதி சுற்றுக்கு Soon Huat-Shevon இணை முன்னேறியது

கோலாலம்பூர்:

சீனப் பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்குத் தேசிய கலப்பு இணையான Soon Huat-Shevon முன்னேறியது. 

Soon Huat-Shevon இணை  உலகின் இரண்டாம் நிலை இணையான சீனாவின்  Jiang Zhen Bang-Wei Ya Xin-யை  23-21, 21-16 என்ற நேர் செட்களில்  வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

Changzhou  ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டி  34 நிமிடங்கள் நடைபெற்றது. 

இதற்கிடையில், மற்றொரு தேசிய கலப்பு இரட்டையர் ஜோடியான ஹூ பாங் ரான்-செங் சு யின் இந்தோனேசியாவின் டெஜான் பெர்டினன்ஸ்யா-குளோரியா இமானுவேல் விட்ஜாஜாவிடம் 14-21, 9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேறத் தவறினர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset