நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில்  அல் நசர் அணியினர்  வெற்றி பெற்றனர்.

டம்மாம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் எத்திபாக் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் எத்திபாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, சலிம், ஆண்டர்சன் தலிஸ்கா ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் அஹ்லி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் டமாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் காலிஜ் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அல் பாஹ்யா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset