நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் Baker's Cottage நிறுவனத்தின் snow skin சேனைக்கிழங்கு மூன்கேக் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

சிங்கப்பூர்: 

சிங்கப்பூரில் Baker's Cottage நிறுவனத்தின் snow skin சேனைக்கிழங்கு மூன்கேக் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதில் E coli எனும் பாக்டீரியா அதிகளவில் இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

E coli மனிதர்களின் குடல்களில் இயல்பாக இருக்கக்கூடியது. அது பொதுவாக உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. 

ஆனால் பாக்டீரியாவின் சில ரகங்கள் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

மூன்கேக்குகளை வாங்கியோர் அவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பாக்டீரியாவால் மீட்டுக்கொள்ளப்படும் 2-ஆவது மூன்கேக் இதுவாகும்.

முன்னதாக Four Seasons Durian நிறுவனத்தின் Mini D24 டுரியான் மூன்கேக் மீட்டுக்கொள்ளப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset