நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்:  சீனா முதல் முறையாக ஒப்புதல்

பீஜிங்:

கிழக்கு லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் 4 இடங்களில் படைகளை விலக்கிக் கொண்டுள்ளதாக சீனா முதல்முறையாக தெரிவித்துள்ளது.

"கிழக்கு லடாக் எல்லையில் படை குவிப்பு தொடர்பாக சீனாவுடன் எழுந்த பிரச்னையில் 75 சதவீதம் தீர்க்கப்பட்டுவிட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ரஷியாவில் சந்தித்துப் பேசினர். அப்போது, இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், கிழக்கு லடாக் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளுமே இதுவரை 4 இடங்களில் படைகளை விலக்கிக் கொண்டுள்ளன.

எனவே, எல்லையில் பதற்றம் குறைந்துவிட்டது. எல்லைச் சூழலும் கட்டுக்குள்தான் உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset