நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்

சிங்கப்பூர்:

மூன்கேக் மூலப்பொருள்கள் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்துக்கு BreadTalk நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

கடையில் ஒரு மூன்கேக் 'சைவ மாமிசத்துடன் காளான்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

அதன் மூலப்பொருள் பட்டியலில் பன்றி எண்ணெயும் முட்டையும் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்களிடையே அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

BreadTalk நிறுவனத்தின் Facebook பக்கத்தில் சம்பவம் நடந்தது.

'மூன்கேக் சைவம் என்றால் வீகன் (Vegan) உணவுமுறையைப் பின்பற்றுவோருக்கு அது ஏற்றதா?' என்று இணையவாசி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

'விலங்கு எண்ணெயும் முட்டையும் இருப்பதால் வீகன் உணவுமுறையைப் பின்பற்றுவோருக்கு மூன்கேக் உகந்ததில்லை' என்று நிறுவனம் பதிலளித்தது.

விலங்கு எண்ணெய் சைவ உணவு சாப்பிடுவோருக்கும் பொருந்தாது என்று சுட்டிய இணையவாசிகள் BreadTalkஇன் விளம்பர உத்தியைக் குறைகூறினர்.

இணையவாசி ஒருவர் சைவ மூன்கேக்கின் மூலப்பொருள் பட்டியலில் இருந்த அசைவப் பொருள்களைச் சுட்டிப் படத்துடன் பதிவுசெய்தார்.

மூன்கேக் உண்மையில் சைவ உணவு சாப்பிடுவோருக்கு உகந்தது என்று BreadTalk தெளிவுபடுத்தியது.

மூன்கேக்கில் தாவர எண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. உணவுவகைகளில் பழைய உணவுப் பட்டியல் ஒட்டுவில்லைகள் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அது சொன்னது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திய குழப்பத்துக்கு அது மன்னிப்புக் கேட்டது. உணவின் தரத்துக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகவும் BreadTalk தெரிவித்தது.

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset