செய்திகள் இந்தியா
ஆட்டின் மீது RAM; பறிமுதல் செய்த போலிஸ்: திருப்பித் தரச் சொன்ன நீதிமன்றம்
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து, ஆடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அப்போது மும்பையின் பேலாப்பூரில் 'RAM' என எழுதப்பட்ட ஆடு ஒன்று இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்தக் கடைக்கு வெளிப்புறத்தில் இருந்த மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அந்த ஆட்டைப் பலரும் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இது வைரலானதைத் தொடர்ந்து, இந்து அமைப்பைச் சேர்ந்த பஜ்ரங் தள ஆர்வலர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
”இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் இறைச்சிக்கடையில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆட்டின் மீது ’ராம்’ என்று எழுதப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டது. இதையடுத்து, மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் 295(A) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்த போலீஸார், முஹம்மது ஷபி ஷேக், சஜித் ஷஃபி ஷேக், குய்யம் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஆட்டை வாங்கிய முஹம்மது ஷபி ஷேக்கின் கடைக்கும் சீல் வைக்கப்பட்டதுடன், அவர் வசம் இருந்த 22 ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது முகமது ஷபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தை பிரமாணப்பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், ”நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை நாங்கள் தாக்கல் செய்தோம்.
அதில் ஆட்டை வாங்கிய ரியாஸ் அகமது மிதானி (Riyaz Ahmed Mithani) என்பவர் தனது பெயரின் ஆங்கில எழுத்தை சேர்த்து RAM (Riyaz -ல் இருந்து R, Ahmed -ல் இருந்து A, Mithani-ல் இருந்து M) என எழுதி வைத்தார். பக்ரீத் வேளையில் அதிகமானவர்கள் ஆடுகள் வாங்குவார்கள்.
அந்த சமயத்தில் ஆடுகள் மாறிவிடக்கூடாது என்பதற்காக இப்படியான அடையாளங்களை இடம்பெற வைப்பது வழக்கம்தான்’’ என்ற வாதம் வைக்கப்பட்டது.
இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதுமட்டுமின்றி, முகமது ஷபியின் கறிக்கடைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டதுடன், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 22 ஆடுகளை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 9:40 pm
இஸ்ரேல் டைம் மிஷினை வைத்து வயதை குறைப்பதாக ரூ.35 கோடியை ஏமாற்றிய உ.பி. தம்பதி
October 3, 2024, 9:58 pm
லவ் ஜிஹாதுக்கு வெளிநாட்டு நிதி: உ.பி. நீதிமன்ற நீதிபதி சர்ச்சை கருத்து
October 3, 2024, 9:40 pm
மது விலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்ய சபதம்: புதிய கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷேர்
October 3, 2024, 12:18 pm
வெள்ளி கோள் ஆய்வு விண்கலம் 2028-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
October 3, 2024, 11:15 am
சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்
October 2, 2024, 5:58 pm
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 4986 சிவப்பு காது ஆமைகள் பறிமுதல்
September 30, 2024, 12:46 pm
காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா
September 30, 2024, 12:33 pm
ஏர் இந்தியா விமானத்தின் உணவில் கரப்பான் பூச்சி
September 29, 2024, 1:27 pm