
செய்திகள் விளையாட்டு
ரியல்மாட்ரிட் தான் மிகச் சிறந்த கால்பந்து கிளப்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
மாட்ரிட்:
ரியல்மாட்ரிட் தான் மிகச் சிறந்த கால்பந்து கிளப் என்று ஜாம்பவான் கிரிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் மாட்ரிடில் நடந்த ஒரு நிகழ்வில் தனது கருத்தினை வெளிப்படுத்திய போது, ரியல்மாட்ரிட் அணியை வரலாற்றிலேயே சிறந்த கால்பந்து கிளப் என புகழ்ந்துள்ளார்.
தற்போது சவுதி அரேபியாவின் அல்நசர்
கிளப்பின் கேப்டனாக இருக்கும் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் ஐந்து ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தையும் பல முறை லா லீகா வெற்றிகளையும் அடைந்தார்.
ரொனால்டோ 2009 முதல் 2018 வரை ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி, அந்நாட்டின் மிக முக்கியமான விளையாட்டு வீரராக திகழ்ந்தார்.
அவரது விளையாட்டு திறமையும் அணிக்கு கொண்டுவந்த வெற்றிகளும் ரியல் மாட்ரிட் அணியை உலகின் மிகச் சிறந்த அணி எனப் பாராட்டக் காரணமாக இருந்தன.
ரொனால்டோ தனது ரியல் மாட்ரிட் அனுபவத்தை சிறந்த காலங்கள் என்று விவரித்தார்.
அவருடைய மொத்த கோல்களில் ரியல்மாட்ரிட் அணியில் மட்டும் 450க்கும் மேற்பட்ட கோல்களை அவர் அடித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:50 am
1,000 கோல்களை நோக்கி ரொனால்டோ: 93.7% நிறைவு செய்துள்ளார்
June 11, 2025, 3:24 pm
வியட்நாமை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடிய ஹரிமாவ் மலாயா அணி: பிரதமர் அன்வார் வாழ்த்து
June 11, 2025, 8:44 am
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: வியட்நாமை வீழ்த்தியது மலேசியா
June 11, 2025, 8:41 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: நெதர்லாந்து அபாரம்
June 10, 2025, 9:01 am
உலகக் கிண்ண தகுதி சுற்று: பெல்ஜியம், குரோஷியா வெற்றி
June 10, 2025, 8:53 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இத்தாலி வெற்றி
June 9, 2025, 9:59 am
மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் விரைவில் வரும்: ரொனால்டோ
June 9, 2025, 9:54 am