நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வியட்நாமை கதிகலங்க வைத்த யாகி புயல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்வு 

ஹனோய்: 

யாகி வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது.

மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும்

இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.
புயல் வீச்சை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை நீரில் தத்தளித்து வருகின்றன.

இந்நிலையில், வியட்நாமில் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 69 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset