செய்திகள் விளையாட்டு
உலகப் பூப்பந்து தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் Lee Zii Jia
கோலாலம்பூர்:
Lee Zii Jia உலகப் பூப்பந்து தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
உலகப் பூப்பந்து சம்மேளனம் இன்று பூப்பந்து தரவரிசைக்கான பட்டியலை வெளியிட்டது.
அண்மையில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் Lee Zii Jia வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.
உலகப் பூப்பந்து தரவரிசை பட்டியலில் சீனாவின் Shi Yuqi தொடர்ந்து முதல் நிலையிலுள்ளார்.
இரண்டாவது இடத்தில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சென் இடம்பெற்றுள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசியா வலுவாக உள்ளது.
உலகின் முதல் 20 இடங்களில் நான்கு தேசிய ஜோடிகள் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், நாட்டின் முன்னணி ஜோடியான ஆரோன் சியா-சோ வூய் யிக் கடந்த ஆண்டு சீனா பொது பூப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததால் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில், பெர்லி டான்-எம்.தினா உலக அளவில் எட்டாவது இடத்தில் நீடிக்க, கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜியே-தோ ஈ வெய் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
நாட்டின் முன்னணி மகளிர் ஒற்றையர் வீராங்கனையான கோ ஜின் வெய் இரண்டு இடங்கள் சரிந்து உலகின் 33வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
எர்லிங் ஹாலண்டின் வெற்றி கோலை அனுமதித்த வீடியோ உதவி நடுவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
September 14, 2026, 1:12 pm
4 வயதில் சர்க்கரை நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev
September 14, 2026, 10:09 am
