நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து உலகில் ரொனால்டோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஹாரி கேய்ன் விருப்பம்

லண்டன்:

கால்பந்து உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற இங்கிலாந்து வீரர் ஹாரி கேய்ன் விருப்பம் கொண்டுள்ளார்.

ஹாரி கேய்ன் தற்போது ஃபின்லாந்திற்கு எதிரான தேசிய லீக் மோதலில் இங்கிலாந்துக்காக தனது 100ஆவது ஆட்டத்தில் விளையாடுகிறார். 

இங்கிலாந்தின் சாதனை கோல் அடித்தவர். இந்த கோடை கால யூரோவின் போது தேசிய அணிக்காக விளையாடியதற்காக விமர்சனத்தைப் பெற்றுள்ளார்.

ஆனால் ஸ்காட்லாந்திற்கு எதிராக  தனது 901ஆவது கோலை அடித்த ரொனால்டோ போன்று தாமும்  தொடர்ந்து விளையாட முடியும் என்று ஹாரி கேய்ன் சுட்டிக் காட்டியுள்ளார். 

இன்னும் பல வருடங்களுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடி கோல் அடிக்கவும் தாம் இலக்கு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

எனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த நிலையில் உணர்கிறேன்.

ரொனால்டோ தனது 901ஆவது கோலை 39 வயதில் அடித்ததைப் பார்ப்பது என்னால் முடிந்தவரை விளையாடத் தூண்டுகிறது. 

நான் இங்கிலாந்தை மிகவும் நேசிக்கிறேன். அது எந்த நேரத்திலும் முடிவடைவதை நான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset