நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குப்பைகளை மூக்குக்கண்ணாடிகளாக மாற்றும் தைவான்

தைப்பே:

தைவானில் உள்ள "zero-waste" எனும் பட்டறை பிளாஸ்டிக் போட்டல்கள், உணவுப் பொட்டலங்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசப்படும் கரண்டிகள், பயன்படுத்தப்படாதப் பொம்மைகள் எனக் குப்பைகளாகக் கருதப்படும் பல பொருள்களுக்கு மறுஉயிர் கொடுக்கின்றது .

அதில் கலந்துகொள்வோர் தங்களது வீட்டிலிருந்து கொண்டுவரும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி இரண்டே மணி நேரத்தில் மூக்குக்கண்ணாடிகளாக மாற்றுகின்றனர்.

பட்டறையை Miniwiz என்ற தைவானிய நிறுவனம் நடத்துகிறது. 

கற்கள், துணி மாட்டிவைக்க உதவும் கம்பிகள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மேலும் பல பொருள்களையும் அது உற்பத்தி செய்கிறது.

அதற்காக 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "miniTrashpresso" என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுவதாக Miniwiz நிறுவனத்தைத் தோற்றுவித்த ஆர்தர் ஹுவாங் (Arthur Huang) Reuters என்ற ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

மேலும், குப்பைகள் உற்பத்தியாவதைத் தடுத்து ஒரு பொருளை எப்படி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதைப் பட்டறை யோசிக்க வைத்ததாக அதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

தைவானில் கடந்த ஆண்டு மட்டும் 11.58 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அதில் 6.27 மில்லியன் டன் கழிவுகள் மீண்டும் மறுபயனீடு செய்யப்படக்கூடியவை என்று அதன் அரசாங்கத் தரவுகள் கூறுகின்றன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset