செய்திகள் உலகம்
இலங்கையில் கோவிட் -19 தொற்றுக் காலத்தில் மருந்து வாங்க செய்யப்பட்ட மாபெரும் மோசடியை அம்பலப்படுத்திய ரவூப் ஹக்கீம்
கொழும்பு:
கோவிட் -19 தொற்றைக் கண்டறிவதற்கு துரித அன்டிஜன் (Rapid Antigen), பி சி ஆர் (PCR) என்பவற்றை முறைகேடாக கொள்வனவு செய்ததன் மூலம் கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஊழல் மோசடியை பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அம்பலப்படுத்தியுள்ளார் .
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பேசியதாவது:
(அ) (1 ) 2019 தொடக்கம் 2022 வரை அரச மற்றும் தனியார் துறையினரால் கொவிட்-19 தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் மற்றும் பி சி ஆர் பரிசோதனைகள் எத்தனை?
(2) மேற்படி பரிசோதனைகளுக்கானவற்றை வழங்குவதற்கு தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் யாவை என்பதை அமைச்சர் இந்த சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ)(2) துரித அன்டிஜன் பரிசோதனை மற்றும் பிசிஆர் பரிசோதனை தொடர்பில் அவை ஒவ்வொரு வகைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செலவு என்ன?
( 2) 2019 தொடக்கம் 2022 வரையிலான காலத்தில் துரித அன்டிஜன் மற்றும் பி சி ஆர் பரிசோதனைகளுக்காகஅரசாங்கம் செலவிட்ட மொத்த தொகை என்ன என்பவற்றை வெவ்வேறாக அமைச்சர் இந்த சபைக்கு தெரிவிப்பாரா ? அவ்வாறன்றேல் ஏன்? எனக் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சர், துரித அன்டிஜன்(Rapid Antigen), பீசி ஆர்(PCR) செயல்பாடுகளுக்காக 6444 மில்லியன் ரூபா அதாவது 6.4 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
26 நிறுவனங்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த 26நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் பீ சீ ஆர், அன்டிஜன்களை முன்னெடுத்துள்ளன.
ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ் நிறுவனம் அன்டிஜன் மற்றும் பீசீஆர் என்பவற்றை முன்னெடுத்துள்ளது. எனினும் ,2200 மில்லியன் ரூபாய்க்கான ஒப்பந்தத்தை வழங்கிய பார்மா நிறுவனத்தினர், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யவில்லை.
அவர்கள் பதிவு செய்யும் செயற்பாட்டுக்காக 2021ஆம் ஆண்டு 6ஆம் மாதம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயினும் அவர்கள் உரிய தகைமையை பூர்த்தி செய்யாததன் காரணமாக அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனவே அதிகூடிய அன்டிஜன் ,அதாவது 2மில்லியன் அன்டிஜன்களை கொள்வனவு செய்துள்ள நிறுவனம் தேசிய ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யபடவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அதன் தரவுகள் என்னிடம் உள்ளன.
ரவூப் ஹக்கீம் எம்.பி : அவை தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் அவற்றை முன்னரே கொள்வனவு செய்துள்ளன.
அதனூடாக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யும் வாய்ப்பு அற்றுப்போயுள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
சுகாதார அமைச்சர் : ஆம். இது சம்பந்தமாக ஒரு பிரச்சினை இருக்கின்றது. உலக சந்தையில் காணப்பட்ட விலையை விடவும் அதிகூடிய விலைக்கு அரசாங்கம் அவற்றைக் கொள்வனவு செய்துள்ளது. அதுவும் பீசிஆர், அன்டிஜன் கொடுக்கல் வாங்கல் போன்றே தெரிகிறது.
நாம் நியமிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதமே நிறைவடைகின்றது. இது தொடர்பில் ஆராய்ந்து ஊழல் தொடர்பில் உங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் அறிவிப்போம்.
ரவூப் ஹக்கீம் எம்.பி : சில நிறுவனங்கள் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்வதற்கு முன்பதாக, பரிசோதனை மட்டத்தில் இருந்து அவற்றை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தொடர்பில் விசாரணை நடத்துங்கள். குறைந்த விலைக்கு வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், உறவினர்களுக்கு உதவுவதற்காக இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அது தொடர்பில் விசாரணை நடத்துவீர்களா?
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் : அதன் கீழேயே பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தொடர்பில் நான் கூறினேன். நீங்கள் கேள்வி எழுப்பும் சர்ச்சைக்கு வித்திட்ட கிளை நிறுவனத்திற்கு அரசாங்கம் 2.2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, தரவுகளை சபைக்கு சமர்ப்பிக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 20, 2024, 10:50 pm
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 93.1 மீட்டர் கிறிஸ்துமஸ் ரொட்டி
December 20, 2024, 7:33 pm
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு
December 20, 2024, 1:04 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கத் தயார் : விளாடிமர் புதின்
December 19, 2024, 5:46 pm
பறவைக் காய்ச்சலிலிருந்து பிரான்ஸ் விடுபட்டது
December 19, 2024, 9:55 am
புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டிப்பிடித்துள்ளதாக ரஷ்யா சுகாதாரத் துறை அறிவிப்பு
December 18, 2024, 4:21 pm
எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பேன்: இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க
December 18, 2024, 3:30 pm
இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு
December 18, 2024, 2:44 pm