நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் 2-ஆவது வகை நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் குறையும்: பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழ்

பிரிட்டன்:

டார்க் சாக்லேட் எனப்படும் இனிப்புக் குறைவான அல்லது இனிப்பில்லாத சாக்லேட் வகையைச் சாப்பிடுவதால்  2-ஆவது வகை நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் குறையும் என்று பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் சராசரியாக 25 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட 3 ஆராய்ச்சிகளின் முடிவுகள் பயன்படுத்தப்பட்டன.


பொதுவாக சாக்லேட் சாப்பிட்ட சுமார் 192,000 பேரும் dark chocolate, milk chocolate எனக் குறிப்பாகச் சாப்பிட்ட சுமார் 112,000 பேரும் பங்கேற்றனர்.

அவர்களுக்கும்  2-ஆவது வகை நீரிழிவு நோய் நோய்க்கும் உள்ள தொடர்பு கவனிக்கப்பட்டது.

வாரத்துக்கு 5 முறை...ஒவ்வொரு முறையும் 28 கிராம் சாக்லேட் சாப்பிடும்போது  2-ஆவது வகை நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

milk சாக்லேட் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் குறையவில்லை.

அதை அதிகம் சாப்பிடுவதால் எடை கூடும் சாத்தியம் இருந்ததாக ரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இருப்பினும் முடிவுகளை உறுதி செய்யக் கூடுதல் சோதனைகள் செய்யப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset