நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பறவைக் காய்ச்சலிலிருந்து  பிரான்ஸ் விடுபட்டது

பாரிஸ்:

ஒரு மாத காலமாக பறவைக் காய்ச்சல் குறித்து நோய்கள் பதிவு செய்யப்படாத நிலையில் நோய்த்தொற்றுலிருந்து பிரான்ஸ் விடுபட்டது  என்று அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சர் அன்னி ஜெனெவார்ட் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.

மேலும், இவ்வாண்டு ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்து 12 பண்ணைகளில் உள்ள கால்நடைகளுக்கும் மற்றும் 3 கோழிகளுக்கும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக அவர் அறிவித்தார்.

தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு வாத்துகளுக்காக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 2025-ஆம் ஆண்டும் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது, பிரான்ஸ் பறவைக் காய்ச்சல் பரவாது இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset