நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில்  விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம்; விமரிசையாக நடைபெறும்: டான்ஶ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

தலைநகர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

இவ்வாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

மலேசியாவில் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

நாளை செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மாலை 7 மணிக்கு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு கொடியேற்று வைபவம் நடைபெறும்.

இரவு 7.30 மணிக்கு ஶ்ரீ கணேசர் பெருமான் தங்க ரதத்தில் தலைநகரை சுற்றி வலம் வருவார்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி காலை முதல் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

சனிக்கிழமை என்பதால் அதிகமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவஸ்தானம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொண்டு ஶ்ரீ கணேசர் பெருமானின் அருளை பெற்று செல்லுமாறு டான்ஶ்ரீ  நடராஜா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset