நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை

பாரிஸ்: 

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்ற நிலையில் மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு இதற்கு முன்பாக, 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T42) தங்கமும், 2020-ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T63) வெள்ளியும் வென்றுள்ளார்.

கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-ஆவது உலகப் பாரா தடகள போட்டி தொடரில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றிருந்தார்.  

உலகப் பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்ற முதல் தங்கம் அது.

அந்த இறுதிப் போட்டியில், 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார். அதன் மூலம் புதிய சாதனையையும் படைத்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset