
செய்திகள் வணிகம்
Saree Pre Pleating எனும் சேலையை நேர்த்தியாக கட்டும் ஒருநாள் பயிற்சியை விமர்சகன் ஊடகம் நடத்தியது
கோலாலம்பூர்:
பெண்கள் சுயத் தொழிலில் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற நோக்கத்திற்காக Saree Pre Pleating எனும் சேலையை நேர்த்தியாக கட்டும் ஒருநாள் பயிற்சிக்கு விமர்சகன் ஊடக ஏற்பாடு செய்திருந்தது.
25 பெண்கள் கலந்து கொண்ட இந்தச் சிறப்பு பயிற்சிக்கு மனிதநேய தம்பதியர் அம்மா ரத்னவள்ளி, ஐயா விஜயராஜ் சவ்டரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த ஒருநாள் பயிற்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலகுவான முறையில் சேலையை மடிப்பு எடுத்து அதனை ironing செய்யும் முறையும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
இளம் பெண்கள், குடும்ப பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள் என பல பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அம்மா ரத்னவள்ளி, பெண்கள் சுயக்காலில் நிற்க பழகி கொள்ளவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலம் பெண்கள் கைத்தொழிலைக் கற்றுக்கொண்டு சுயவருமானத்தை பெருக்கி கொள்ள முடியும் என்று ரத்னவள்ளி அம்மா குறிப்பிட்டார்.
பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மன உறுதி வேண்டும். தாம் இன்று இந்த நிலைக்கு வருவதற்கு பல்வேறு தடைகளைத் தாண்டி வந்துள்ளதாக அவர் கூறினார்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரத்னவள்ளி அம்மாவும் விஜயராஜ் ஐயாவும் நற்சான்றிதழ்களை எடுத்து வழக்கினார்கள்
இதே போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து திட்டமிட்டிருப்பதாக விமர்சகன் ஊடக நிர்வாகியும் தோற்றுநருமான SP சரவணன் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am