நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுக்மாவின் சிலம்ப போட்டியில் பேராக் மாநில குழுவினர் வாகை சூடினர்

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தில் நடைபெற்று வரும் சுக்மா போட்டியில் சிலம்பம் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

சிலம்ப போட்டியில் பங்கெடுத்த பேராக் மாநில குழுவினர் மொத்தமாக 6 தங்கம், 2  வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். 

சிலம்ப போட்டியில் 14 தங்கப்பதக்கத்திற்குப் போட்டிகள் நடத்தப்பட்டன அதில் பேராக் மாநில குழு ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முறையே தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினர். 

தனிப்பிரிவில் பி.பிரவீணா தங்கப்பதக்கத்தையும் ஆண்கள் பிரிவில் வி. தங்கேஸ்வரன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றார். 

குத்து வரிசை பெண்கள் பிரிவில் வித்யாஶ்ரீ அருள்செல்வனும் ஆண்கள் பிரிவில் அஸ்வினும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset