நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜெர்மனியின் சாதனை கேப்டன் ஓய்வு: ரசிகர்கள் வருத்தம்

முனிச்:

ஜெர்மனி கால்பந்து அணியின் கோல் காவர் மேனுவல் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 

2009ஆம் ஆண்டில் அறிமுகமான 38 வயதான கோல் காவலர் மேனுவல் நியூயர், ஜெர்மனி அணிக்கு 61 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார்.

ஜெர்மனி அணி 2014ஆம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்றதில் நியூயர் முக்கிய பங்கு வகித்தார்.

அத்துடன் அப்போது சிறந்த கோல் காவலராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜெர்மனி அணிக்காக 124 போட்டிகளிலும், பாயர்ன் முனிச் அணிக்காக 345 போட்டிகளிலும் நியூயர் விளையாடியுள்ளார்.

மேனுவல் நியூயரின் ஓய்வு அறிவிப்பு ஜெர்மனி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset