நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் சமநிலை கண்டனர்.

அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ராயிட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ராயிட்  அணியுடன் சமநிலை கண்டனர்.

அல் நசர் அணியின் கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த வேளையில் அல் ராயிட் அணியின் கோலை முஹம்மத் பௌஷாயிர் அடித்தார்.

அல் நசர் அணியினர் இவ்வாட்டத்தில் சமநிலை காணாதது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் அல் ரியாத் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் அல் வேஃதா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset