நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி: ஆகஸ்ட் 24இல் நடைபெறுகிறது

பெட்டாலிங் ஜெயா:

கோலாலம்பூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட கால்பந்து போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி  ஜாலான் ஹங் துவாவில் உள்ள VICTORIA INSTITUTION திடலில் நடைபெறவுள்ளது. 

ஒரு நாள் நடைபெறும் இந்த கால்பந்து போட்டியில் 15 ஆண்கள் அணியும் 8 பெண்கள் அணியும் களம் காண்கின்றன என்று கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் வீரமணி கூறினார்.

ஆண்கள் பிரிவில் 9 ஆட்டக்காரர்கள் பங்கேற்பு, பெண்கள் பிரிவில் 7 ஆட்டக்காரர்கள் பங்கேற்பு நடைபெறவுள்ளது. 

இளம் விளையாட்டாளர்களை உருவாக்கவும் அவர்களை அடையாளம் காணவும் இரண்டாவது முறையாக தமிழ்ப்பள்ளிக்கு இடையிலான கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த போட்டியின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டாளர்கள் மிஃபாவின் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட போட்டிகளில் பங்கெடுப்பார்கள் என்று வீரமணி தெரிவித்தார். 

கடந்தாண்டு சுமார் 900 மாணவர்கள் பங்கெடுத்த இந்த காற்பந்து விளையாட்டு போட்டியில் இம்முறை 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அச்சங்கத்தின் உதவி தலைவரும் மீபாவின் துணைத் தலைவருமான ராஜேந்திரன் குறிப்பிட்டார். 

முன்னதாக, 12 வயதுக்குக்கீழ்ப்பட்ட கால்பந்து போட்டிக்கான விளக்க கூட்டமும் குலுக்கல் ஆட்ட தேர்வும் நடைபெற்றது. நடப்பு வெற்றியாளரான புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளி தம்பூசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியுடன் மோதுகிறது. 

ஒவ்வொரு ஆட்டமும் 20 நிமிடங்கள் தான் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தின் வாயிலாக இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காணவே இப்போட்டி நடத்தப்படுகிறது என்று ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

குழு நிலையிலான ஆட்டங்கள் காலை 8.30 மணி தொடங்கி மதியம் வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு KNOCK OUT சுற்றுகள் நடைபெறவுள்ளன.  

பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகமும் ஆதரவும் அளிக்க அழைக்கப்படுவதாக கோலாலம்பூர் இந்தியர் காற்பந்து சங்கத்தின் தலைவர் வீரமணி கேட்டுக்கொண்டார்.

- மவித்ரன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset